ஸ்ரீவில்லிபுத்துார்: எழுத்தாளர் சங்கம் சார்பாக புத்தக வெளியீடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் வித்யாலயா பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் உள்ள எழுத்தாளர் முனியாண்டி எழுதிய மூளி என்ற பெயரில் புத்தகம் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த புத்தகத்தின் சிறுகதை தொகுப்பில் உள்ள அனைத்து சிறுகதைகளும் கற்பனைகள் அல்ல, நான் பார்த்த பழகிய வாழ்ந்த கேட்ட சம்பவங்களும் நிகழ்வுகளுமே சிறுகதையாக உருவெடுத்திருக்கின்றன. சிறு வயதில் பார்த்த கொடுமைகள், வறுமையின் பிடியில் சிக்கி அம்மாவுடன் பிழைப்புக்காக அலைந்து திரிந்த சம்பவங்கள் உள்ளிட்டவைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி