மம்சாபுரம் பேரூராட்சியின் கூட்டம் நேற்று(அக்.30) கூட்ட அரங்கில் நடைபெற்ற நிலையில் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் திராவிட மாடலுக்கு எதிராக செயல்படுவோம் என்று பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய துணைத் தலைவர் தங்கமாங்கனி மாநாட்டில் பெரியார் கட்அவுட்டை வைத்துக் கொண்டு திராவிடத்திற்கு எதிராக பேசும் விஜய் குழப்பத்தில் உள்ளதாகவும், விஜயின் திராவிட மாடலுக்கு எதிரான பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும் அவரை கண்டித்து 15 கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படுதாக கூறினார்.