ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மலையேற்றப் பாதையில் வந்த இருவரிடம் இருந்து 8 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வருசநாட்டைச் சேர்ந்த குபேந்திரன் மற்றும் சோலைராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.