சிவகாசியில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வீட்டில் பட்டாசு வெடித்ததில் 80% தீக்காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அம்மன் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கௌதம் (27) கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, மேல்மாடியில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் காயமடைந்தார். 

சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி