சிவகாசி: அனுமதியின்றி டிராக்டரில் மண்அள்ளி நபர் கைது...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டியில் அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். திருத்தங்கல் சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வடமலாபுரம் சுடு காட்டு ஆற்றுபடுகையில் இருந்து மண் அள்ளிய டிராக்டரை சோதனையிட்டனர். உரிய அனுமதி இன்றி மண் அள்ளியது தெரியவந்ததை அடுத்து, டிராக்டரை ஓட்டி வந்த வடம்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (37) என்பவரை கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளர் சூர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி