சிவகாசியில் வீட்டின் இரும்பு கேட்டிற்குள் சிக்கிக்கொண்ட வளர்ப்பு நாயை தீயணைப்புத் துறையினர் சாமர்த்தியத்துடன் மீட்டனர். திருத்தங்கல் பாண்டியன் நகரில் இளையராஜா என்பவரின் வளர்ப்பு நாய் மணி, உறவினர் ஸ்ரீதரன் வீட்டிற்குச் சென்றபோது இரும்பு கேட்டின் கம்பிகளுக்கிடையே சிக்கிக்கொண்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று நவீன கட்டர் இயந்திரம் மூலம் நாயை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட நாய் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாலாட்டியபடி சென்றது.