சிவகாசி அண்ணாமலை - உண்ணாமலை அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இயற்கை விதிகளை மீறினால் பாதிப்புகள் ஏற்படும் என்றும், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, உரிய உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.