சிவகாசி அருகே தகராறு: பீர்பாட்டிலால் தாக்கி கொலை முயற்சி

சிவகாசி அருகே, மதுபானக் கடையில் மது வாங்கிவிட்டு வெளியே வந்த டிராக்டர் ஓட்டுநர் போத்திராஜாவை, பணம் கேட்டு அஜித், சதீஷ், வேல்முருகன் ஆகியோர் தாக்கியுள்ளனர். பணம் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், அஜித் பீர்பாட்டிலால் போத்திராஜாவின் தலையில் தாக்கியதாகவும், மற்றவர்களும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அஜித் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி