சிவகாசி அருகே சித்துராஜபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவரான கார்த்தீஸ்வரன் (31), வயிற்று வலியால் அவதிப்பட்டு, மருத்துவம் பார்த்தும் பலனளிக்காததால் விரக்தியடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.