விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி டவுன் போலீசார் சித்துராஜபுரம் பகுதியில் ரோந்து பணியின்போது சுரேஷ் (23) என்பவரை 100 கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர். மாரனேரி போலீசார் விளாம்பட்டி பகுதியில் மணிகண்டன் (39) என்பவரை 100 கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர். திருத்தங்கல் போலீசார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பொன்னுமணி (19), தங்கப்பாண்டி (21), விக்னேஷ் (20), முத்துகருப்பசாமி (23) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மொத்தம் 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.