விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி கிராமத்தில் உள்ள உறை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், போலீஸார் ஜேசிபி இயந்திரம் மூலம் கிணற்றை தூர்வாரியபோது, கடந்த அக்டோபர் 31 அன்று மாயமான ரவிக்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரின் உடல்கள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டன. திருமண நிகழ்ச்சிக்கு வந்த இவர்கள், இயற்கை உபாதைக்கு சென்றபோது கிணற்றின் அருகே வைக்கப்பட்டிருந்த மின் வலையில் சிக்கி இறந்திருக்கலாம் என போலீஸார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.