விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் ஆஸ்கார் பிரடி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஐயப்பன், சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.