விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. ராஜசேகர் (64) ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் (ரூ. 50) சிறந்த சிகிச்சை அளித்து வந்தார். இலவசமாக மாத்திரைகள், டானிக், ஊசி போன்றவையும் வழங்கினார். கடந்த அக். 25ஆம் தேதி நள்ளிரவில் மாரடைப்பால் மரணமடைந்த அவருக்கு, ராஜபாளையம் பொதுமக்கள் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஜவஹர் மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் பெண்கள் ஆயிரம் பேர் உட்பட 5000 பேர் பங்கேற்றனர். டாக்டர் ராஜசேகரின் படம் அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் ஊர்வலம் அவரது இல்லம் வரை சென்றது.