இராஜபாளையம்: சிவன் ஆலயத்தில் பிரதோஷ விழா...

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் ஆலயங்களில் ஐயப்பசி மாத பிரதோஷ விழா நேற்று (நவம்பர் 3) வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் கொண்டு வந்த இளநீர், பால், தயிர், தேன், மஞ்சள் தூள், விபூதி போன்ற பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சந்தனம், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான ஆண், பெண் சிவபக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி