அதன்படி சென்னை எழும்பூர் – கொல்லம் இடையேயான கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் (16101, 16102) வரும் ஜூன் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கு புறப்படும். அதேபோல் மறுமார்க்கமாக, கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்துக்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பயணிகள் இதை கவனத்தில் கொண்டு தங்களது பயண திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.