விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தை அடுத்த சத்திரப்பட்டியில் ஆடி மாத முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இப்பகுதி நெசவுத் தொழிலாளர்கள், சிறுவர், சிறுமிகள், பெண்கள் முளைப்பாரிகளுடன் அம்மன் கோவிலுக்குச் சென்று கும்மியடித்து, பின்னர் வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று கிணற்றில் கரைத்தனர். திருவிழாவை முன்னிட்டு மருத்துவதுணி மற்றும் பேண்டேஜ் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.