மருத்துவமனை திறந்து வைத்த அமைச்சர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரூ 30 கோடி மதிப்பில் 217 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திறப்பு விழாவில் வருவாய் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி, புதிய கட்டிடத்தையும் அதிநவீன மருத்துவ உபகரணங்களையும் பார்வையிட்டார். இந்த புதிய மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி, 2 அறுவை சிகிச்சை அரங்குகள், ரத்த வங்கி மற்றும் ஆறு மாடிகள் உள்ளன.

தொடர்புடைய செய்தி