விருதுநகர்: தங்க நகைகள் கொள்ளை.. அதிரடி கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஆர். கே நகரைச் சேர்ந்த மருந்தாளுநர் விஜயகுமார் வீட்டில் செப்டம்பர் 28 அன்று நகை, பணம் திருடு போனது. இது தொடர்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த சாமுவேல் என்ற செல்வகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி