விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்தது. வனத்துறையினர் சிறுத்தையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் இதுவரை சிறுத்தை நடமாட்டம் இல்லாத நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.