சேலம் மேற்கு பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மீது ஜெயப்பிரகாஷ் தலைமையிலான அன்புமணி ஆதரவு கும்பல் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் சி. இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது கொலை முயற்சி என்றும், ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், வன்முறையைத் தூண்டும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார். அன்புமணி தமிழகத்தில் கலவரம் உருவாக்க முயல்வதாகவும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், அருள் எம்.எல்.ஏ.க்கு துப்பாக்கி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.