விழுப்புரம்: பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 476 கிலோ குட்கா பறிமுதல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சரவணன் (IPS) அவர்களின் உத்தரவின்படி, எம். என். குப்பம் அருகே வாகனச் சோதனையின் போது, இரண்டு கார்களில் கடத்தப்பட்ட 476 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹைதராபாத்தைச் சேர்ந்த விஜயகுமார் (44), ராஜஸ்தானைச் சேர்ந்த ஹக்கீம் (30), நிலேஷ்குமார் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து Hans (360 கிலோ), Cool Lips (60 கிலோ), Vimal (50 கிலோ), V1 (6 கிலோ) என மொத்தம் 476 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி