விழுப்புரம்: முட்டை லாரி கவிழ்ந்து விபத்து.. ஆறு போல் ஓடிய முட்டைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் அடுத்த பொற்படாக்குறிச்சி பகுதியை சேர்ந்த கவியரசு என்பவர், தலைவாசலில் இருந்து முட்டை லோடை மினி லாரியில் ஏற்றி சென்னை நோக்கி சென்றார். திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, அடையாளம் தெரியாத பேருந்து உரசியதால் ஓட்டுநர் நிலை தடுமாறி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முட்டைகள் சாலையில் சிதறி, சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி