கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய காவல்துறையினர், வானூர் ஜங்ஷன் அருகே வாகன தணிக்கையின்போது புதுச்சேரி மாநில மதுபானம் கடத்திச் சென்ற இருவரை கைது செய்தனர். வந்தவாசியை சேர்ந்த வேலன் (31) மற்றும் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (38) கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 180 மில்லி அளவு கொண்ட 150 மதுபான பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.