செஞ்சி அருகே காரை கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் ஜெயந்தி, கடந்த 2023ல் திருமணம் செய்து குடும்ப அட்டை பெற்றுள்ளார். திருமணம் முடிந்து 11 மாதங்கள் கழித்து, ஜெயந்தி இறந்துவிட்டதாக தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டு, குடும்ப அட்டையிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஜெயந்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 முறைக்கு மேல் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.