1967, 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெகவின் 2-வது மாநில மாநாடு ஆக.21 அன்று மதுரையில் நடைபெறவுள்ள நிலையில், தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தவெக மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் நிரூபிக்கப்படப்போகிறது. அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.