2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அதிரடி தீர்மானம் அக்கட்சி சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து தகெவவுக்கு அதிமுக தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த நிலையில், விரைவில் கூட்டணி அமையும் சூழல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த தவெக முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி அதிமுகவுடன் கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.