கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் 10 நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 20-க்கும் மேற்பட்டோரை நேற்று (அக்.6) மாலை அவர் வீடியோ கால் மூலம் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, வீடியோ காலில் பேசும்போது புகைப்படம் மற்றும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், விரைவில் நேரில் வந்து சந்திப்பேன் எனவும் பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் உறுதியளித்துள்ளார்.
நன்றி:தந்தி