'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' என்ற தலைப்பில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நாளை (நவ., 23) பங்கேற்க உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தவெக அறிவித்துள்ளது.