சென்னை: பாஜகவை பகைத்துக் கொள்ள விஜய் விரும்பவில்லை என தெரிவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, தவெக, அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. தவெக வராதது குறித்து திருமாவளவன் கூறுகையில், “தவெக தலைவர் விஜய், பாஜக அரசை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என இதன் மூலம் தெரியவருகிறது” என்றார்.