இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்.. தர்மஅடி கொடுத்த வீடியோ

உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா திருவிழாவில் இளம்பெண்ணுக்கு இரண்டு பேர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். உடனடியாக அந்த இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கினர். தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் கைது செய்தனர். உள்ளூர் மக்கள் அந்த இளம் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டியதோடு, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி