கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க கோரிய மனு மீது அக்.13ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறி வரும் நிலையில், இந்த தீர்ப்பை எதிர்பார்த்து பலரும் காத்திருக்கின்றனர்.