வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனகொண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார்-மதுமிதா தம்பதியினரின் 3 மாதக் குழந்தைக்கு நேற்று (நவ. 04) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. குழந்தையை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, பரிசோதனையில் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.