வேலூரில் 90 மதுபாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி