இறந்த நண்பனுக்கு ரத்ததானம் கொடுத்து பிறந்தநாள் கொண்டாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் கூடப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர் கடந்த 2024 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது 21வது பிறந்தநாளான இன்று, சந்தோஷின் 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்து, மறைந்த நண்பனுக்கு நெகிழ்ச்சியுடன் பிறந்தநாள் கொண்டாடினர். அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே இதுபோன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், இறந்த நண்பனுக்காக இளைஞர்கள் செய்த இந்த செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி