ராணிப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து!

ராணிப்பேட்டை மாவட்டம், வன்னிவேடு பைபாஸ் சாலையில் நேற்று இரவு ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் வேன் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் முற்றிலும் சேதமடைந்ததுடன், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறை, உடலை மீட்டு, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி