ராணிப்பேட்டை பகுதியில் உள்ள ஜிகே உலக தனியார் பள்ளியில் இன்று (நவ. 03) புதியதாக கட்டப்பட்ட அரங்கம் (ஆடிட்டோரியம்) திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரங்கத்தை திறந்து வைத்தார். முன்னதாக, அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா, பெரியார் மற்றும் கருணாநிதியின் திரு உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.