வேலூரில் பசு மாடு திருடியவர்கள் கைது

வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30), விவசாயி. இவர் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த 2 பசுமாடுகளை கடந்த மாதம் 29-ந் தேதி இரவு மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சதீஷ் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதில் வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சரவணபாபு (42), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த முனியாண்டி (38), விஜயசந்த் (30) மற்றும் களம்பூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (39) ஆகிய 4 பேரும் மினிவேனில் பசுமாடுகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. 

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் நேற்று சரவணபாபு உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பசுமாடுகளும் மீட்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி