வேலூரில் இன்று (நவ. 04) நடைபெற்ற அரசு விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 11.80 கோடி மதிப்பிலான 31 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும், ரூ17.91 கோடி மதிப்பிலான 15 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுபுலட்சுமி, MP கதிர் ஆனந்த், எம்எல்ஏ கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு விஜயன், மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.