திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து காரில் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டையை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில், சக்கரகுப்பம் அருகே சோதனையில் ஈடுபட்ட போலீசார் துக்கன் என்பவரிடம் காரில் இருந்து 25 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.