தனியார் நட்சத்திர ஓட்டலில் IT நிறுவன உரிமையாளர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில், சென்னை பகுதியைச் சேர்ந்த ஐடி நிறுவன உரிமையாளர் எழில் ராஜன், தனது 23 ஊழியர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஏலகிரி மலையில் பல தனியார் விடுதிகள் மற்றும் நீச்சல் குளங்கள் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி