ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகருக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம். சுகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.