வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று பொருட்கள் வழங்கப்படும் என்றும், இதற்கான பணிகள் இன்று மற்றும் நாளை (நவ.4) நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.