வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பாலாற்றின் கிளை மற்றும் துணை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாலாற்றில் தண்ணீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றில் பாய்ந்தோடும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்து வருகின்றனர். வரும் நாட்களில் மழை தொடர்ந்தால் பாலாற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.