விரைவில் படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்: மத்திய அமைச்சர்

இந்தியாவில் கடந்த 2019 ஆண்டு முதல் இயங்கிவரும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையில், தற்போது 150 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இருக்கை வசதி மட்டுமே உள்ளது. இந்நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் டெல்லியில் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும், அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் இரண்டாவது ரயிலும் தயாராகிவிடும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி