அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இது அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார். இதனையொட்டி நியூயார்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நியூயார்க்கின் ட்ரைஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு கும்பலை அமெரிக்க உளவு துறை கண்டுபிடித்து அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்துள்ளனர். மேலும், ஐ.நா. பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகாமையில் முகாமிட்டு செயல்பட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.