மதுரை, நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு இன்று (அக்., 05) முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் சென்றடையும். நெல்லையில் இருந்து இன்று மாலை 4.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் விருதுநகர், திண்டுக்கல், திருச்சி வழியாக நாளை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடையும். தொடர் விடுமுறை முடிந்து மக்கள் இன்று காலை முதலே சென்னைக்கு பயணித்து வருகின்றனர்.