டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அண்மையில் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். உலகளாவிய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இந்த சந்திப்பில் வலியுறுத்தினார். மேலும், ஐநா எடுக்கும் இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.