போக்குவரத்து நெரிசல்.. இதயத்தை மெட்ரோவில் கொண்டு சென்ற மருத்துவர்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்றிரவு (செப்.11), அப்போலோ மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக 20 நிமிடங்களில் ஒரு மனித இதயம் விரைவாக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்க மெட்ரோ பயன்படுத்தப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக மெட்ரோவில் எடுத்துசெல்லப்பட்ட இதயம், சரியான நேரத்தில் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்காக மெட்ரோ மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நன்றி: karnatakaportf

தொடர்புடைய செய்தி