TN இளைஞருக்கு ரூ.60 கோடி ஜாக்பாட்.. கூரையைப் பிய்த்து கொட்டிய லாட்டரி

சென்னையைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினியர் சரவணன் வெங்கடாச்சலம் (44), ஐக்கிய அரபு அமீரகத்தில் பிக் டிக்கெட் லாட்டரியில் 25 மில்லியன் திர்ஹாம், (இந்திய மதிப்பில் ரூ.60 கோடி) பரிசு வென்றுள்ளார். வேலை காரணமாக அழைப்பை எடுக்காத அவருக்கு, பின்னர் மனைவி, நண்பர்கள் மூலம் பரிசு விழுந்த விவரம் தெரியவந்துள்ளது. 'பரிசுத்தொகையை குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்துவேன்' என அவர் தெரிவித்துள்ளார். கடன்களால் அவதிப்பட்டு வந்த தனக்கு தற்போது, அதிர்ஷ்டம் அள்ளிக் கொடுத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி