தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க கருத்தரங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வந்தவாசியில் திண்ணை கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க கிளைத் தலைவர் பூங்குயில் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்க துணைத் தலைவர்கள் ஏ. பி. வெங்கடேசன், கவிஞர் தமிழ்ராசா, செயற்குழு உறுப்பினர்கள் என். ராதாகிருஷ்ணன், கோ. பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் த. சாந்தி வரவேற்றார். வந்தவாசி நகர் மன்ற துணைத் தலைவர் க. சீனுவாசன் தொடக்க உரையாற்றினார். தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி